Friday, October 23, 2026

குளியலறைக்கு கதவு அகலத்தில் கவனம் தேவை!

பொதுவாக புதிய வீடு கட்டும் போது, வெளிப்புற அளவுகள், அமைப்புகள் விஷயத்தில் தான் பலரும் கவனம் செலுத்துகின்றனர்.  ஒரு கட்டடத்தின் வெளிப்புற வடிவமைப்பு, அளவுகள், தோற்றம் சரியாக அமைய வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது.

அதே நேரத்தில் புதிய வீட்டில் உட்புற வடிவமைப்பு விஷயத்திலும் மக்கள் வரைபட நிலையில் கவனம் செலுத்த வேண்டும்.  வீடு கட்டுவதற்கான திட்டமிடலில், உட்புறம் எத்தனை அறைகள் இருக்க வேண்டும் அவற்றின் அளவுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கனும்.


வீட்டுக்கான கட்டுமான பரப்பளவில் மொத்த அளவுகள் என்னவாக இருக்கனும் என்பதை கவனத்தில் வைத்து செயல்பட வேண்டும்.  வீட்டின் உட்புறத்தில் வரவேற்பு அறை எங்கு என்ன அளவில் அமைய வேண்டும் என்பதில் கவனமாக திட்டமிட வேண்டும்.


இதற்கு அடுத்தபடியாக, படுக்கை அறை, சமையலறை, குளியலறை ஆகியவை எங்கு எப்படி, என்ன அளவில் இருக்க வேண்டும் என்று பார்க்க வேண்டும்.  இதில் பெரும்பாலான இடங்களில் இரண்டு படுக்கை அறை அமைக்க திட்டமிடுவது வழக்கம்.


இதில் உட்புற அறைகளின் அளவுகள் விஷயத்தில் கவனம் செலுத்தும் போது, ஒவ்வொரு அறைக்கும் எங்கு நுழைவாயில் அமைய வேண்டும் என்று பார்க்க வேண்டும்.  பொதுவாக, வரவேற்பு அறையில் இருந்து பார்க்கும் போது பிரச்னை ஏற்படாத வகையில் அறைகளின் கதவுகள் அமைய வேண்டும்.


குறிப்பாக, குளியலறையின் கதவுகள், உட்புறமாக திறக்கும் வகையில் அமைய வேண்டியது அவசியம்.  குளியலறையின் கதவு, 2.6 அடி அகலம் இருந்தால் போதும்.  கட்டுமான தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் அடிப்படையில் இந்த அளவு வரையறுக்க வேண்டும்.


அதே போன்று உயரம், ஐந்து அல்லது ஆறு அடி வரை அமையலாம்.  அதே நேரத்தில், குளியலறைக்கு கதவுகள் அமைப்பதில் வழக்கமான மரம் போன்ற பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப் படுகிறது.


குளியலறைக்கு கதவு அமைக்கும் போது அங்கு ஈரம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது என்பதை கருத்தில் வைத்து அதற்கு ஏற்ற பொருட்களில் கதவு வாங்கலாம்.ஈரத்தால் பாதிக்கப்படாத பல்வேறு வகை பொருட்கள் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளன என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.


No comments:

Post a Comment