Wednesday, May 27, 2026

புதிய வீடு கட்ட எந்த வகை ஒப்பந்தத்தை எப்படி தேர்வு செய்ய வேண்டும்?

சொந்தமாக வைத்துள்ள நிலத்தில் வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள் அதற்கான பணிகளை எப்படி மேற்கொள்வது என்பதில் சரியாக திட்டமிட வேண்டும்.  இன்றைய சூழலில், யாரும் நேரடியாக பணியாளர்களை பயன்படுத்தி வீட்டை கட்டுவது இல்லை.

இதனால், வீடு கட்டும் பணியை ஒப்பந்த முறையில் அதற்கான நபரிடம் ஒப்படைப்பது வழக்கமான நடைமுறையாக மாறியுள்ளது.  இதன்படி, உங்கள் வீட்டை கட்டும் பொறுப்பை ஒப்பந்த முறையில் யாரிடம் ஒப்படைப்பது என்பதில் உரிமையாளர்கள் தெளிவான முடிவை எடுக்க வேண்டும்.

பொதுவாக ஒரு பொறியாளர், அல்லது கட்டுமான ஒப்பந்ததாரர் ஒருவரை தேர்வு செய்து பணிகளை அவரிடம் ஒப்படைப்பது என்று இதை மேலோட்டமாக பார்க்காதீர்.  வீடு கட்டும் பொறுப்பை ஒருவரிடம் ஒப்பந்த முறையில் ஒப்படைக்கும் முன் எந்த வகை ஒப்பந்தம் செய்கிறோம் என்று பாருங்கள்.

இதில் தற்போதைய நிலவரப்படி, நான்கு வகையான ஒப்பந்த முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.  இதன்படி, லேபர் கான்ட்ராக்ட், பில் விலை அடிப்படையிலான கான்ட்ராக்ட் ஆகிய வகை ஒப்பந்தங்கள் உள்ளன.

மெட்டீரியல் அடிப்படையிலான இரண்டு ஒப்பந்தங்களையும் பயன்படுத்தும் போது, பொருட்களை உரிமையாளர்கள் வாங்கி கொடுக்க வேண்டும்.  பணிகளை மேற்கொள்வதில் தொழில்முறை வல்லுனர்கள் பங்கேற்பு இருக்காது என்பதால், பொருட்கள் வீணாவது அதிகமாக இருக்கும்.

மெட்டீரியல் கான்ட்ராக்ட், பில் விலை அடிப்படையிலான கான்ட்ராக்ட்களில், வேலை மற்றும் பொருட்களுக்கான செலவு தொகையை மட்டும் நீங்கள் கொடுக்க வேண்டி இருக்கும்.  மெட்டீரியல் கான்ட்ராக்ட் என்கிற போது கட்டடத்தின் அளவுகள் அடிப்படையில் செலவு மதிப்பீடு செய்யப்படுகிறது.

இதில் வீட்டின் அளவுகளை அளப்பது போன்ற விஷயங்களை உரிமையாளர்களால் தெளிவாக அறிய முடியாது.  இதில் உரிமையாளர்கள் விபரமாக இருந்தால் மட்டுமே பிரச்னை இன்றி வீட்டை கட்டி முடிக்க முடியும் என்பதை புரிந்து செயல்படுங்கள்.


பில் விலை அடிப்படையிலான கான்ட்ராக்ட் வரும் போது, வீட்டை கட்டுவதில் எந்தெந்த பணிகள் ஒப்பந்தத்தில் வரும் என்பது தெளிவு படுத்தப்படும்.  இதற்கு ஒரு கன அடிக்கு இவ்வளவு என்ற அடிப்படையிலும், சதுரடி அடிப்படையிலும் வீட்டின் செலவுகளுக்கான தொகை முடிவு செய்யப்படும்.


இந்த விஷயங்களை சீர் தூக்கி பார்த்து அதில் உங்களுக்கு எது ஏற்றது என்று பார்த்து அந்த ஒப்பந்த முறையை தேர்வு செய்ய வேண்டும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.


No comments:

Post a Comment