பொதுவாக கட்டடங்களில் மேல் தளத்தில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். மொட்டை மாடிக்கான கட்டுமான பணியின் போதே, தண்ணீர் வெளியேறுவதற்கான வாட்டம் முறையாக இருக்க வேண்டும்.
இத்துடன் மொட்டைமாடியில் சேரும் தண்ணீர் எவ்வித தடையும் இன்றி உடனுக்குடன் வெளியேற வழிசெய்ய வேண்டும். இதற்கான குழாய்கள் இணையும் இடங்களில் உடைப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்.
மொட்டை மாடியில் இருந்து வெளியேற்றப்படும் மழை நீர், நிலத்தில் இறங்க முறையான மழை நீர் உறிஞ்சு குழிகள் அமைக்கப்பட வேண்டும். இந்த நீர் உறிஞ்சு குழாய்கள் சாதாரணமாக, மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும்.
இதே போன்று நீர் உறிஞ்சு குழிகளில் இருந்து தண்ணீர் நிலத்தில் இறங்கும் வசதி ஆகியவற்றிலும் முறையான பராமரிப்பு அவசியம். இத்துடன் உங்கள் வீட்டை சுற்றி மழைக்காலத்தில் அதி நேரம் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.
சாலையில் உள்ள மழை நீர் வடிகால்களுக்கு உரிய இணைப்பை ஏற்படுத்தி, வீட்டில் இருந்து உபரி மழை நீரை வெளியேற்ற வேண்டும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுநர்கள்.

No comments:
Post a Comment