கம்பி கூடுகள், அதன் மேல் கொட்டப்படும் கான்கிரீட் கலவை ஆகியவற்றின் எடையும், அதற்கு மேல் பணியாளர்கள் சென்று வருவதால் ஏற்படும் சுமை ஆகியவற்றை கணக்கிட வேண்டியது அவசியம்.
ஒரு கட்டடம் கட்டும் போது அதில் அனைத்து பாகங்களும் உறுதியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் பணிகள் மேற்கொள்ளப்படும். அதில் குறிப்பாக, அஸ்திவாரம், மேல் தளம் போன்ற இடங்களில் இயல்பைவிட கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது.
கட்டடத்தின் மேல் தளத்துக்கான பணிகளை முறையாக திட்டமிட்டு மேற்கொள்வதில் மக்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். மேல் தளத்துக்கான பணியில், கான்கிரீட் போடுவதற்கு முன், கான்கிரீட் போடும் போது, கான்கிரீட் போட்ட பின் என, மூன்று நிலைகளில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
பெரும்பாலான மக்கள் தரமான கம்பிகள், தரமான கான்கிரீட் கலவையை வாங்கி கொடுத்தால் போதும் மேல் தளம் உறுதியாக உருவாகிவிடும் என்று நினைக்கின்றனர். இதில், மேல் தளத்துக்கு முந்தைய நிலை என்பதில் என்ன விஷயங்களை பார்க்க வேண்டும் என்பது பலருக்கும் தெரிவதில்லை.
பொதுவாக, கட்டுமான பணியின் போது மேல்தளத்துக்கான பணி வரும் போது வழக்கமான நபர்களுக்கு பதிலாக புதிதாக ஆட்கள் வரவழைக்கப்படுவார்கள்.
இவர்கள் சுவர்கள், தூண்களுக்கு இடையில் தாங்கு பலகை அமைத்து, அதன் மேல்கம்பி கட்டும் வேலையை மேற்கொள்வார்.
இவர்கள் சுவர்கள், தூண்களுக்கு இடையில் தாங்கு பலகை அமைத்து, அதன் மேல்கம்பி கட்டும் வேலையை மேற்கொள்வார்.
இதில், அனைத்து கட்டடங்களிலும் ஒரே மாதிரியான பணி என்று நாட் பணியாளர்கள் பார்வையில் தெரியும். ஆனால், உரிமையாளருக்கு தான் தன் கட்டடத்தின் மிக முக்கிய கட்டம் இது என்ற எண்ணம் இருக்கும் என்பதால், இந்த பணியில் கூடுதல் கண்காணிப்பு அவசியம்.
மேல் தளத்துக்கான சென்ட்ரிங் பணிகளை மேற்கொள்ளும் நிலையில், கம்பிகள் அதன் மேல் கொட்டப்படும் கான்கிரீட் கலவை, அதில் வேலையாட்கள் சென்று வருவது ஆகியவற்றால் ஏற்படும் சுமையை தாங்கும் அளவுக்கு பல கைகள் இருக்க வேண்டும். பல இடங்களில் இந்த தாங்கு தளம் அமைப்பதிலேயே குறைபாடு ஏற்படுகிறது.
இதனால், கம்பி கட்டும் வேலை முடிந்து, கான்கிரீட் போடும் போது கூடுதலாக ஓரிரு நபர்கள் மேலே ஏறிய நிலையில் மொத்த தாங்கு தளமும் சரிந்து விழுவதை பார்க்க முடிகிறது. இதனால், மேல் தள பணிக்கு முன் அதற்கான தாங்கு தளம் எந்த அளவுக்கு உறுதியாகி அமைக்கப்பட்டுள்ளது என்பதை கவனிக்க வேண்டும்.
இதில் கம்பி கூடுகள், அதன் மேல் கொட்டப்படும் கான்கிரீட் கலவை ஆகியவற்றின் எடை என்னவாக இருக்கும், அதில் நடமாடும் மனிதர்கள் எண்ணிக்கை என்ன என்பதையும், கவனிப்பது அவசியம். இதை சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் பார்த்து கொள்ள மாட்டாரா என்று கேள்வி எழுந்தாலும், உரிமையாளர் இதை உறுதி செய்வதன் வாயிலாக மட்டுமே தவறுகளை தவிர்க்க முடியும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுநர்கள்.

No comments:
Post a Comment