வீடு, மனை வாங்குவோர் அதற்கான சர்வே எண் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபடுவதில்லை. இதனால், இத்துறையில் பல்வேறு மோசடிகள் அதிகரித்துள்ளன.
பொதுவாக,
நீங்கள் வீடு, மனை வாங்க நினைக்கும் போது அதற்கான சர்வே எண் என்ன என்று மட்டும் பார்க்கிறீர்கள். அந்த
சர்வே எண் பத்திரத்திலும், பட்டா உள்ளிட்ட ஆவணங்களிலும் ஒரே மாதிரி இருக்கிறதா என்று பார்க்கிறோம்.
இதற்கு அப்பால், அந்த சர்வே எண் எப்போது, எப்படி ஒதுக்கப்பட்டது என்பது போன்ற விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக,
பல்வேறு சொத்துக்களுக்கு பிரதான சர்வே எண்கள் இருக்காது.
இன்றைய சூழலில் விற்பனைக்கு வரும் பெரும்பாலான சொத்துக்கள் உட்பிரிவு செய்யப்பட்ட சர்வே எண்களுக்கு உட்பட்டதாகவே உள்ளன. இந்த நிலையில் தான் சர்வே எண்கள் ஆராயப்படுகின்றன.
ஆனால், அந்த உட்பிரிவு சர்வே எண் எதில் இருந்து பிரிந்து வந்தது என்பது தொடர்பான விஷயங்களில் யாரும் கவனம் செலுத்துவதில்லை. உதாரணமாக, 243 / 2 ஏ என்ற சர்வே எண்ணுக்கு உரிய சொத்து விற்பனைக்கு வருகிறது.
இந்த சர்வே எண்ணில் இதற்கு முன் என்னென்ன பரிமாற்றங்கள் நடந்தன என்று மட்டுமே மக்கள் பார்க்கின்றனர். இது
உட்பிரிவு செய்யப்பட்ட சர்வே எண் தான்.
இதன் பிரதான சர்வே எண், 243க்கான நில அளவை வரைபடம் என்ன என்று யாரும் பார்ப்பது இல்லை. இது
போன்ற பிரதான சர்வே எண் ஏரி, குளத்துக்கு உரியதாக இருந்தால், நீங்கள் வாங்க இருக்கும் சொத்தின் பாதுகாப்பு தன்மை கேள்விக்குறியாகும்.
ஏனெனில், நீர் நிலைகள், அரசு நிலங்கள், கோவில் சொத்துக்கள் போன்றவற்றுக்கான பிரதான
சர்வே எண்கள் உட்பிரிவு செய்யப்பட்டதாக இருக்காது. இவற்றை
மற்ற சொத்துக்கள் போன்று உட்பிரிவு செய்வதும் இயல்பாக நடக்காது.
நீங்கள் வாங்க விரும்பும் சொத்தின் பிரதான சர்வே எண், உட்பிரிவு செய்ய முடியாத வகைபாட்டை சேர்ந்தது எனில், அதில் ஏதோ வில்லங்கம் வரப்போகிறது என்று அர்த்தம். இது போன்ற சொத்துக்களை வாங்குவதால் பிற்காலத்தில் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க வேண்டிய நிலை வரலாம் என்கின்றனர் சார்-பதிவாளர்கள்.

No comments:
Post a Comment