Friday, July 25, 2025

நிலங்களுக்கு சர்வே எண் ஒதுக்கப்படும் அடிப்படை வழிமுறைகள் என்ன?

 

நில சர்வே எண் ஒரு சொத்து உரிமையாளருக்கு முக்கியமான விபரம்.  நில சர்வே எண் குறித்து, சொத்து உரிமையாளர்கள் இரு மடங்கு உறுதியாக இருக்க வேண்டும்.  ஒரு சொத்து உரிமையாளர் நில சர்வே எண்ணை எளிதாக சரி பார்க்க முடியும்.

நில சர்வே எண்ணுடன் ஏதேனும் முரண்பாடு இருந்தால், சொத்தின் விற்பனை பத்திரத்துடன் நீங்கள் குறுக்கு சோதனை செய்யலாம்.  பழைய சொத்து எனில், சொத்து வரி ரசீதில், நில சர்வே எண்ணைக் காணலாம்.

இந்த, இரண்டு ஆவணங்களும் கிடைக்கவில்லை அல்லது நீங்கள் விபரங்களை கண்டுபிடிக்கவில்லை என்றால், நீங்கள் உள்ளுர் நகராட்சி அல்லது மாநகராட்சியை தொடர்பு கொள்ள வேண்டும்.

நம் நாட்டில், நிலங்கள் முறையாக அளிக்கப்பட்டு, சர்வே எண்கள் ஒதுக்கப்படுகின்றன.

இந்த சர்வே எண்கள் தான், நிலங்களின் அடிப்படை அடையாளமாக ஆவணங்களில் குறிப்பிடப்படுகின்றன.

நில சர்வே எண்ணைப் பெறுவதற்கான நடை முறை எளிமையானது மற்றும் விரைவானது.  ஏனெனில், விற்பனை பத்திரத்தில் எண் உள்ளது.  விற்பனை பத்திரத்தில், நில சர்வே எண் இல்லை என்றால், விற்பனையாளரிடம் சரி பார்க்கவும்.  மாற்றாக, வாங்குபவர் உள்ளூர் நகராட்சி அலுவலகத்திற்குச் சென்று, குறிப்பிட்ட சொத்தின் நில சர்வே எண்ணை, எவ்வாறு பெறுவது என்பது குறித்த வழிகாட்டுதலைப் பெறலாம்.

இவ்வாறு சர்வே எண் ஒதுக்கப்பட்ட நிலம் பல்வேறு பாகங்களாக பிரிக்கப்படும் நிலையில், அந்த எண் உட்பிரிவு செய்யப்படுகிறது.

இதில், ஒரு நிலத்துக்கு எதன் அடிப்படையில் ஒரு எண் ஒதுக்கப்படுகிறது என்பது புதிராக உள்ளது.

நம் நாட்டில், நில அளவை என்பது, 150 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாறு உடையது.  இதில், நிலங்கள் அதன் அமைவிடம் அடிப்படையிலும், வருவாய் வசூலிப்புக்காக என, இரண்டு காரணங்களுக்காக சர்வே செய்யப்படுகின்றன.

நிலத்தின் புவியியல் அமைப்பை வரையறை செய்ய மேற்கொள்ளப்படும் நில அளவையானது ஒட்டு மொத்த நிர்வாக பணிக்காக பயன்படுகிறது.  இதன் அடிப்படையிலேயே அரசு மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தும்.

வருவாய் வசூல் பணிக்காக மேற்கொள்ளப்படும் நில அளவையில் தெரிய வரும் விபரங்கள் தான், பொது மக்களாலும் பயன்படுத்தப்படுகிறது.

ஒவ்வொரு நிலத்துக்கும், எவ்வளவு தீர்வை விதிப்பது என்பதே இதன் நோக்கமாக உள்ளது.

ஆனால், வணிக முறையில், நிலங்கள் கைமாறுவதில், இந்த சர்வே விபரங்களே பிரதானமாக பயன்படுத்தப்படுகின்றன.  நிலம் வாங்குவோர், விற்பவர்கள் இதையே பயன்படுத்துகின்றனர்.

ஆரம்பத்தில், நிலங்களுக்கு சர்வே எண் ஒதுக்குவதில், பல்வேறு குழப்பங்கள் எழுந்தன.

உரிமையாளர் அடிப்படையில், எண்கள் ஒதுக்குவதா, பரப்பளவுகள் அடிப்படையில், எண் ஒதுக்குவதா என்ற குழப்பம் நிலவியது.

நஞ்சை நிலம் என்றால், 2 ஹெக்டேர் பரப்பளவு ஒரு நிலமாக கணக்கிடப்பட்டு, ஒரு எண் ஒதுக்கப்பட்டதுபுஞ்சை நிலம் என்றால், 4 ஹெட்டேர் ஒரு நிலமாக பிரிக்கப்பட்டு எண் ஒதுக்கப்பட்டது.

ஒரு சர்வே எண்ணுக்கு உட்பட்ட நிலம் அதிகபட்சமாக, 20 பிரிவுகள் வரை பிரிக்கப்படலாம்.  இதற்கு மேல் உட்பிரிவு ஏற்பட்டால், நஞ்சையில், 80 ஏர்ஸ், புஞ்சையில் 1 . 50 ஹெக்டேர் ஒரு நிலமாக பிரிக்கலாம்.

இத்தகைய வரையறை அடிப்படையிலேயே நிலங்களுக்கு, சர்வே எண்கள் ஒதுக்கப்பட்டன.  இதில், சில வழிமுறைகள் தற்போது மாறி வருகின்றன என்கின்றனர் நில அளவையாளர்கள்.

No comments:

Post a Comment