Thursday, July 24, 2025

நிலத்தின் உட்பிரிவு விவரங்களை முழுமையாக ஆய்வு செய்வது எப்படி

 

பொதுவாக விற்பனைக்கு வரும் நிலத்தின் சர்வே எண் என்ன என்றும், அதன் அடிப்படையில் ஆவணங்கள் உள்ளதா என்று பார்ப்போம்.  அதில் உட்பிரிவு எண் குறித்த கூடுதல் விபரங்களை எங்கு போய் தேடுவது என்ற குழப்பம் அனைவருக்கும் இருக்கிறது.

குறிப்பாக, ஒவ்வொரு நிலத்துக்கும் அடிப்படையாக ஒரு சர்வே எண் ஒதுக்கப்பட்டு இருக்கும்.  அந்த நிலம் பல்வேறு பாகங்களாக பிரித்து விற்கப்படும் போது, பிரதான எண்ணில் இருந்து பாகங்களுக்கு பிரித்து உட்பிரிவு எண் ஒதுக்கப்படும்.

உட்பிரிவு எண்கள் தனியாக உருவாக முடியாது. தனியாக அடையாளப்படுத்த முடியாது. இது பிரதான சர்வே எண்கள் அடிப்படையிலேயே இருக்கும்.

உதாரணமாக ஒரு குறிப் பிட்ட கிராமத்தில், 27 என்று ஒரு நிலத்துக்கு சர்வே எண் ஒதுக்கப்பட்டுள்ளது.  அந்த நிலத்தின் பரப்பளவு, மூன்று ஏக்கராக இருக்கலாம்.

தற்போது, அதன் உரிமையாளர், 3 ஏக்கரில் 1 ஏக்கரை இரண்டு வெவ்வேறு நபர்களுக்கு பங்கிட்டு விற்க திட்டமிடுகிறார். இதற்கு முதலில், விற்பனை செய்வதற்கான பாகத்தை அளந்து தனியாக பிரிக்க வேண்டும்.

இவ்வாறு பிரிக்கப்படும் போது, பிரதான சர்வே எண் பிரியும். இதன்படி, பிரதான நிலம், இரண்டு பாகங்கள் என மூன்று பகுதிகளையும் அடையாளப்படுத்த சர்வே எண்கள் ஒதுக்கப்பட வேண்டும்.

வருவாய் துறை மற்றும் நில அளவை துறையினருக்கு மட்டுமே இதில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய அதி காரம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, அவர்கள், பிரதான சர்வே எண்ணான, 27ஐ மூன்று பாகங்களாக பிரிப்பர்.

குறிப்பாக, உரிமையாளரி டம் இருக்கும் பாகம், 27/1 என்றும், விற்கப்படும் பாகங் கள், 27/2,27/3 என்று குறிப் பிடப்படும்.

இது போன்று உட்பிரிவு முறையாக செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆராய வேண்டும்.  சில இடங்களில் பதி திரத்தில் குறிப்பிடப்படும். உட்பிரிவு விபரங்கள் வரு வாய் ஆவணத்தில் மாறுபட்டு இருக்கலாம். இவ்வாறு மாறு பட்ட விபரங்கள் இருப்பின் அத்தகைய நிலத்தை வாங்கும் முடிவை மறுபரிசீலனை செய் வது நல்லது.

சர்வே. எண், உட்பிரிவு எண்களை பொறுத்தவரை, வருவாய் துறையின் ஆவணங் களில் உள்ள விபரங்கள் அடிப் படையிலேயே பத்திரங்கள் இருக்க வேண்டும். வருவாய் துறை ஆவணங்களில் குறிப் பிடப்பட்ட விபரங்கள் சில சமயங்களில் தவறாக கூட இருக்கலாம்.

ஆனால், அதில் இருந்து பத்திர விபரங்கள் வேறுபட்டு இருக்க கூடாது. அப்படி வேறு பட்ட உட்பிரிவு விபரங்கள் இருந்தால் அந்த சொத்தை வாங்குவதால் பிரச்னைகள் வரலாம் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள் என்கின்றனர் வருவாய் துறை அதிகாரிகள்.

No comments:

Post a Comment