Tuesday, July 15, 2025

விதிமீறல் கட்டடங்களில் வீடு வாங்குவதால் ஏற்படும் சிக்கல்கள்!

பொதுவாக புதிய வீடு வாங்குவோர், அதற்கான திட்டத்தில் எவ்வித விதி மீறலும் இருக்கக்கூடாது என்று எதிர்பார்க்கின்றனர்இவ்வாறு, விதிமீறல் இல்லாத திட்டங்களுக்கு தான் வங்கிகள் கடன் கொடுக்கும்.
 
இதனால், வங்கிகள் வீட்டுக்கடன் கொடுக்கிறது என்றால், அந்த திட்டத்தில் பிரச்னை எதுவும் இல்லை என்று மக்கள் நம்ப துவங்கியுள்ளனர்இதில் அடிப்படையாக சில பிரச்னைகள் எழுகின்றன.
 
வங்கிகள் வீட்டுக்கடனுக்கு ஒப்பு கொள்வதே ஒரு குறிப்பிட்ட திட்டத்துக்கான நற்சான்றிதழாக ஆகிவிடுமா என்ற கேள்வி எழுகிறதுஒவ்வொரு குடியிருப்பு திட்டம் மீதான நற்சான்றிதழ் வழங்கும் அமைப்பாக வங்கிகளை மக்கள் நினைப்பது தவறு.
 
வங்கிகள், தாங்கள் வழங்கும் கடன் தொகை முறையாக திரும்ப கிடைக்குமா என்ற நோக்கத்திலேயே சம்பந்தப்பட்ட திட்டம் குறித்த விபரங்களை ஆராயும்.
 
இதில் முதலில், கடன் வாங்குபவரின் திறன், பின்னர் அவர் நிலுவை வைத்தால் அதை அந்த சொத்தில் இருந்து பெறுவதற்கான வாய்ப்பு ஆகிய விஷயங்களை மட்டுமே வங்கிகள் பார்க்கும்.

இந்த விஷயத்தை புரிந்து கொள்ளாமல், பலரும், வங்கிகள் கடன் வழங்கியதாலேயே ஒரு குறிப்பிட்ட குடியிருப்பு திட்டம் பிரச்னை இல்லாதது என்று நினைக்கின்றனர்இந்த எண்ணத்தால் விதிகளை மீறி கூடுதல் வீடுகள் கட்டப்பட்ட திட்டங்களில் மக்கள் வீடு வாங்குகின்றனர்.

புதிதாக கட்டப்படும் திட்டம், ஏற்கனவே, கட்டுமான பணிகள் முடிந்த திட்டம் எதுவாக இருந்தாலும், அது விதிகளுக்கு உட்பட்டு உள்ளதா என்று முழுமையாக ஆய்வு செய்யுங்கள்அடுத்து, திட்ட அனுமதி வரை படத்தில் எத்தனை வீடுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன என்பதை தெளிவாக விசாரியுங்கள்இதன் பின், அந்த வீடுகளின் எண்ணிக்கையுடன், யு,டி.எஸ்., பங்கீடு எப்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை விசாரியுங்கள்எந்தெந்த வீட்டுக்கு எவ்வளவு யு,டி.எஸ்., வழங்கப்பட்டுள்ளது என்பதை தெளிவாக கேட்க வேண்டும்.

இதில் வீடுகளின் எண்ணிக்கையைவிட அதிக எண்ணிக்கையில் யு,டி.எஸ்., பங்கு பிரிக்கப்பட்டு இருந்தால், அதற்கு ஆட்சேபம் தெரிவிக்கலாம்சில இடங்களில், வரைபடத்தில் உள்ள எண்ணிக்கையின் படியான வீடுகளுக்கு சராசரியாக, 50 சதவீதம் யு,டி.எஸ்., வழங்கப்பட்டு இருக்கும்.

ஆனால், அதே திட்டத்தில் விதிகளை மீறி சில வீடுகள் கட்டப்பட்டு இருக்கும்அந்த வீடுகளுக்கு, 50 சதவீதத்துக்கு பதிலாக, ஐந்து சதவீதம் மட்டுமே யு,டி.எஸ்., வழங்கப்பட்டு இருக்கும்.

இவ்வாறு, 5 சதவீத யு.டி.எஸ்., வேறுபாட்டை வீடு வாங்குவோர் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லைஇது போன்ற சிறிய விவகாரங்கள் பயன்பாட்டு நிலையில் பிரச்னையாக தெரியாதுஅந்த கட்டடத்தின் ஆயுள் முடியும் நிலையில், புதிதாக மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளும்போது, இது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும்.

முறையாக வாங்கப்பட்ட வீடுகளின் மதிப்பை குறைக்க இது காரணமாக அமைந்துவிடும் என்கின்றனர் கட்டுமான வல்லுனர்கள் 

No comments:

Post a Comment