I'm Dr. Prabhu Venkataraman, Founder of VV Properties and a RERA-certified property consultant with 14+ years of experience in Chennai real estate. I specialize in luxury villas, premium apartments, and prime plots. At VV Properties, we guide buyers and investors with trust, transparency, and expert advice. Whether you're looking for a dream home or a smart investment, I'm here to help you make the right move.
Monday, July 21, 2025
சொத்து விற்பனை பதிவின் போது சார் - பதிவாளரின் பொறுப்புகள் என்ன?
ஒரு குறிப்பிட்ட சொத்தை நீங்கள் வாங்குவதாக முடிவு செய்த நிலையில் அதற்கு, உரிமையாளரிடம் முன்பணம் கொடுத்து விற்பனை ஒப்பந்தம் மேற்கொள்வது அவசியம். இதைத் தொடர்ந்து, கிரையப் பத்திரத்தை பதிவு செய்ய உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்.
இந்நிலையில், கிரையப் பத்திரம் பதிவு செய்வதைப் பொறுத்தவரை, சொத்து எந்த பகுதியில் அமைந்துள்ளதோ அதற்கு உரிய சார்-பதிவாளர் அலுவலகத்தில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். இதற்காக, ஆவண எழுத்தர் வாயிலாக கிரையப் பத்திரம் தயாரிக்கும்போது, வழிகாட்டி மதிப்பு என்ன, அதன் அடிப்படையில் செலுத்த வேண்டிய முத்திரத் தீர்வை, பதிவுக் கட்டண விபரங்களை அறிய வேண்டும்.
இதன் அடிப்படையில் முத்திரைத் தீர்வை,
பதிவு கட்டணங்களை எந்த வகையில் கட்டுவது என்பதை தெளிவாக முடிவு செய்து செலுத்த வேண்டும். இதில், குறிப்பிட்ட அளவு தொகைக்கு முத்திரைத் தாள் வாங்க வேண்டும் என்றும்,
மீதமுள்ள தொகையை இ-ஸ்டாம்பிங் முறையில் செலுத்தவும் மக்கள் விரும்புகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment