தனி
வீடு அல்லது அடுக்கு மாடி குடியிருப்பு எதுவாக இருந்தாலும், அதில் வீடு வாங்கியவர்கள் முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்று தான் நினைப்பார்கள். இதில்
சில தனிப்பட்ட தேவைகள் காரணமாக அந்த வீட்டை விற்க வேண்டிய நிலை ஏற்படலாம்.
இத்தகைய சூழலில் விலை நிர்ணயிப்பதில் பலரும் பல்வேறு தவறுகள் செய்கின்றனர். உண்மையில்
வீட்டை விற்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், விற்பனையாகும் நிலையில் விலை நிர்ணயிக்க வேண்டும்.
குறிப்பாக, தனி வீடு எனில் நிலத்தின் வழிகாட்டி மதிப்பு, சந்தை மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் புதிய விலையை முடிவு செய்யலாம். இதில்
கடைசியாக அந்த பகுதியில் விற்பனை செய்யப்பட்ட விலை என்ன என்று அறிந்து, அதன் அடிப்படையிலும் விலை நிர்ணயிக்கலாம்.
ஆனால், பெரும்பாலான உரிமையாளர்கள் , நிலத்தின் மதிப்புக்கு ஏற்ப கட்டடத்தின் மதிப்பையும் ஏறுமுகமாக கணக்கிட்டு விலையை நிர்ணயிக்கின்றனர். இது
தவறான நடைமுறையாக பார்க்கப்படுகிறது.
பழைய வீடுகளில் நிலத்தின் மதிப்பு மட்டுமே ஏறுமுகமாக இருக்கும், கட்டடத்தின் மதிப்பு இறங்கு முகமாகத்தான் இருக்கும். இதை
சரியாக புரிந்து சரியான விலையை நிர்ணயித்தால் விற்பனை நடவடிக்கைகள் சிக்கல் இன்றி முடியும்.
தனி வீடு, அடுக்குமாடி குடியிருப்புகள் எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் நிலத்தின் மதிப்பு உயரும். ஆனால்,
அதில் உள்ள கட்டடத்தின் மதிப்பு குறையும்.
உதாரணமாக, 10 லட்சம் ரூபாய் செலவில் கட்டடம் கட்டப்பட்டு இருந்தால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதன் மதிப்பு எட்டு அல்லது ஏழு லட்சம் ரூபாயாகத் தான் கணக்கிடப்படும். இந்த
அடிப்படை வழிமுறையை புரிந்து கொண்டால் வீட்டை விற்பதில் எவ்வித சிக்கலும் ஏற்படாது.
அதே நேரத்தில், தனி வீட்டின் நிலத்தின் மதிப்பு அதிகமாக இருக்கும். அடுக்குமாடி
குடியிருப்புகளில், யு.டி.எஸ்.,
முறையில் கிடைக்கும் நிலத்தின் அடிப்படையிலேயே விலை நிர்ணயிக்கப்படும்.
இதில் புதிதாக வீடு வாங்கும்போது குறைந்த விலை என்பதற்காக குறைவான யு.டி.எஸ்., உள்ள வீட்டை வாங்கியவர்கள் அதிக விலைக்கு அதை விற்க முடியாது. யு.டி.எஸ்., அடிப்படையிலேயே மறு விற்பனைக்கான விலை நிர்ணயிக்கப்படும் என்பதை மக்கள் புரிந்து செயல்பட வேண்டும் என்கின்றனர் மதிப்பீட்டாளர்கள்.

No comments:
Post a Comment