நகரத்தில்
மட்டுமல்லாது, கிராமங்களிலும், ஒரு மனையை குடியிருப்பாய் மாற்றும் போது, சில பல கட்டடங்களை, அரசு
அனுமதியை பெற வேண்டியிருக்கும். அப்படி
ஒரு முறைக்கு பலமுறை தீர விசாரித்து செய்ய வேண்டிய ஒன்று நாம் வாங்கும் மனையோ, வீடோ மறு வகைப்பாடு வரையறையின் கீழ் வருகின்றதா என்பதைக் குறித்து தான்.
சென்னை பெருநகர் பரப்பின் பகுதியில், களப்பணி யாற்றி, அதன் அடிப்படையில், அறிக்கைகள் அளித்தல்.
மற்றும் சென்னை பெருநகர் பரப்பிற்கு வரைவு திட்டம் ஆயத்தம் செய்தலுடன், விரிவான கட்டமைப்பு திட்டம் ஆயத்தம் செய்தல்; புதிய நகர்களை உருவாக்கும் திட்டங்களை ஆயத்தம் செய்தல். போன்றவையே
சி.எம்.டி.ஏ வின்
முக்கிய பணிகளாகும். இங்கும்
வகைப்பாடு வரையறைக்கு,
சி.எம்.டி.ஏ., தான்
இதற்கு முழு பொறுப்பும் ஏற்க வேண்டும்.
இதற்கு மாறாக கட்டுமான திட்டங்களை செயல்படுத்தினால், பயன்பாட்டு நிலையில், பல்வேறு சிக்கல்கள் ஏற்படும். வீட்டு
குடியிருப்பு பகுதியை தொழிற்சாலை பகுதியாக, வியாபார வீதியை குடியிருப்பு பகுதியாக மாற்றி, மறு வகைப்பாடு செய்து, அனுமதி வாங்குவது பின்னாளில் மிகப்பெரிய இக்கட்டில் கொண்டு பொய் விட்டு விடும்.
குறிப்பாக, தொழிற்சாலை பகுதியாக வகைப்படுத்தப்பட்டுள்ள நிலத்தில், குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்த கூடாது.
ஆனால், சமீபகாலமாக வகை பாடுகளை மறுவரையறை செய்து, வேறு நோக்கங்களுக்கு பயன் படுத்துவது அதிகரித்துள்ளது. உதாரணமாக,
ஆதார குடியிருப்புக்காக வகைப்படுத்தப்பட்ட இடம் தொழிற்சாலைக்காக மாற்றப்படுகிறது.
தொழிற்சாலை பயன்பாட்டுக்கு என வகைப்படுத்தப்பட்ட நிலம், ஆதார
குடியிருப்புகளுக்காக
வகைப்பாடு மறுவரையரை செய்யப்படுகிறது. இவ்வாறு மறு வரையறை செய்யப்பட்டுள்ளது என்பதால், அதை நம்பி வீடு வாங்குவோர், பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
குறிப்பாக, ஒரு பகுதியில், 200 ஏக்கருக்கு உட்பட்ட பகுதிகள் தொழிற்சாலை பயன்பாட்டுக்காக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதில்,
5 ஏக்கர் நிலத்தை வாங்கும் ஒருவர், அங்கு குடியிருப்பு கட்ட நினைக்கிறார்.இதற்காக, வகைபாட்டை மறுவரையரை செய்ய, சி.எம்.டி.ஏ., விடம் அவர் விண்ணப்பிக்கலாம்.
இதன் அடிப்படையில், சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் இதற்கான உயர்நிலை குழுவின் ஆய்வுக்கு அந்த விண்ணப்பத்தை உட்படுத்தும்.
இந்த ஆய்வுகள் முடிந்து, நிலம் மறுவரையரை செய்யப்பட்டு, திட்ட அனுமதியும் வழங்கப்பட்டு விடுகிறது. அரசு
தரப்பில் நடைமுறைகள் சரியாக தான் கடைபிடிக்கப்பட்டுள்ளது என்று நம்பி, மக்களும் இது போன்ற திட்டங்களில் வீடு வாங்குகின்றனர்.
கட்டுமான பணிகள் முடிந்து, அங்கு குடியேறும் போது தான், தொழிற்சாலைகளுக்கு மத்தியில், நாம் வசிக்க போகிறோம் என்பது தெரிய வரும். அக்கம்
பக்கத்தில் உள்ள நிலங்கள் அனைத்தும், தொழிற்சாலையாக பயன்படுத்தப்படும் போது, நடுவில் ஒரு நிலம் மட்டும் குடியிருப்பாக மாற்றப்பட்டால், பல்வேறு பிரச்னைகள் ஏற்படும்.
இதே போல தான் குடியிருப்புகளுக்கு மத்தியில், நாம் ஒரு தொழிற்சாலைக்கு அனுமதி வாங்குவது சேரும். குடியிருப்புகளுக்கு
மத்தியில், ஒரு தொழிற்சாலை நடத்துவது என்பது மிக சவாலான விஷயம். பொது
கட்டட விதிகளின் அடிப்படையில், நில வகைப்பாடு மாறுதலில், கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
எனவே, வகைப்பாடு மாற்றப்பட்ட நிலங்களை, அரசு உத்தரவுகள் அடிப்படையில் மட்டும் பார்க்காமல், நேரில் ஆய்வு செய்து, வீடு வாங்குவது நல்லது என்கின்றனர் நகரமைப்பு வல்லுனர்கள்.

No comments:
Post a Comment