Tuesday, July 1, 2025

தண்ணீர் தரம் பார்ப்பதில் செலவை குறைக்க 'ரிஸ்க்' எடுக்காதீர்!

 

          சொந்தமாக, வீடு வாங்க நினைப்பவர்கள், நிலம் சார்ந்த பல்வேறு தொழில்நுட்ப விஷயங்களில், கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
           
       குறிப்பாக, மண்ணின் தரம், சுமை தாங்கும் திறன் தொடர்பான விஷயங்கள் குறித்து கவனம் செலுத்த வல்லுனர்கள் அறிவுறுத்துகின்றனர்.
           
       ஏனெனில், கட்டுமான பணிகளில் அடிப்படையான பொருட்களில் ஒன்று தண்ணீர்.  ஆனால், பெரும்பாலானோர், அதன் தரம் எப்படி இருக்கிறது என்பது குறித்து கவலைப்படாமல், பணிகளை மேற்கொள்வதாக தெரிய வந்துள்ளது.
           
       மேலும், நிலத்தில், மண்ணின் தன்மையில் மிக துல்லியமாக ஆய்வுகள் மேற்கொள்ள அரசு அங்கீகரித்த ஆய்வகங்களை பயன்படுத்தலாம்.  இதில், பொதுப்பணித்துறை சார்ந்த அமைப்புகளை நாடுவது நல்லது.
           
       குறிப்பாக, புதிய கட்டடங்கள் கட்டும் போது, மண் பரிசோதனை எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு, தண்ணீர் தரம் பார்ப்பதும் அவசியம்.  நீங்கள் வாங்கிய நிலத்தில், தண்ணீர் தரம் எப்படி இருக்கும் என்பதை, ஆரம்ப நிலையிலேயே கவனிப்பது நல்லது.
           
       நிலம் பார்க்க செல்லும் முதல் நிகழ்விலேயே, அக்கம் பக்கத்தில் உள்ள கிணறுகளில் எடுக்கப்படும் நீர் குடிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறதா என்று பாருங்கள்.  முடிந்தால், சிறிது தண்ணீர் வாங்கி குடித்துப் பாருங்கள்.
           
       இது, அந்த பகுதியில் கிடைக்கும் தண்ணீரின் தரம் குறித்த பொதுவான ஒரு புரிதலை உங்களுக்கு தரும்.
           
       இதன்பின், அந்த தண்ணீரை தொடர்ந்து குடிப்பதால், உங்களுக்கு பிரச்னை எதுவும் ஏற்படுமா என்பதை சரிபார்க்க வேண்டும்.  அதற்கு நீரை முதலில் பரிசோதிப்பது அவசியமானது.
           
       உப்பு, அமிலம், உள்ளிட்ட இதர தனிமங்களின் அளவு பற்றி ஆய்வகத்தில் சோதித்து, அதற்கான அறிக்கையின் அடிப்படையில், நீரை பயன்படுத்துவது நல்லது.
           
       நீங்கள் வாங்க நினைக்கும் நிலத்தில், ஏற்கனவே, கிணறு அல்லது போர்வெல் போடப்பட்டு இருந்தால், அதில் பெறப்படும் தண்ணீரின் மாதிரியை தர பரிசோதனைக்கு உட்படுத்துவது நல்லது.
           
       கட்டுமான பணிக்கும், மனிதர்கள் குடிப்பதற்கும், அந்த தண்ணீர் ஏற்றதாக இருக்கிறதா என்பதை, அறிவியல் பூர்வமாக உறுதி செய்துக்கொள்ள வேண்டும்.
           
       மேலும், இதில், பொதுப்பணித் துரையின், நீர்வள ஆதார பிரிவு வாயிலாக தர பரிசோதனை செய்வதே நல்லது.
           
       தனியார் ஆய்வகங்களும் உள்ளன.  இருப்பினும், முறையான அரசு அங்கீகாரம் இருக்கும் ஆய்வகங்களை பயன்படுத்துவதும் நல்லது.
           
       சிலர் இதில் பாரம்பரிய வழிமுறைகளை கடைப்பிடிக்கின்றனர்.  பாரம்பரிய வழிமுறைகளை முழுமையாகவும், முறையாகவும் தெரிந்திருந்தால் மட்டும் பயன்படுத்தவும்.  அரைகுறை விபரங்களுடன் பரிசோதனை முயற்சியில் இறங்குவது நல்ல முடிவுகளை அளிக்காது என்கின்றனர் நீர்வளத்துறை வல்லுனர்கள்.
           
       குடிநீர் எப்படியுள்ளது என பார்ப்பது மட்டும் முக்கியமில்லை, கட்டட வேலைக்கு பயன்படுத்தும் தண்ணீரும், தரமாக இருப்பது அவசியம்.
           
       மணல், ஜல்லி, சிமெண்ட் ஆகியவற்றை தண்ணீருடன் தயாரிக்கப்படும்.  கான்கிரீட் கலவையில் சேர்க்கப்படும் தண்ணீரின் அளவு, தரம் ஆகியவற்றை பொறுத்தே கான்கிரீட்டின் வலிமை நிலை நிற்கிறது.

           நீரின் அளவு அதிகமானால், கான்கிரீட் வலிமை குறைந்து விடும்.  நீரின் அளவு சரியாக இருக்கும்படி பயன்படுத்தினால் மட்டுமே கான்கிரீட் சரியான உறுதியுடன் அமையும்.

No comments:

Post a Comment