பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம்
தகுதி:
மத்திய அரசின் மூலம் இலவச சிலிண்டர் வாங்குபவர்கள் இதற்கு முன் சிலிண்டர் இணைப்புகளை பெற்றிருக்க கூடாது. இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க போகும் விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக குடியுரிமை பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
சான்றிதழ்:
இலவச சிலிண்டர் இணைப்பு திட்டமானது குடும்பத்தில் இருக்கும் பெண்களுடைய பெயரில் தான் சிலிண்டர் வழங்கப்படும். இலவச சிலிண்டர் திட்டத்திற்கு தேவைப்படும் ஆவணங்களாக, நகராட்சி தலைவர் அல்லது பஞ்சாயத்து தலைவரிடம் இருந்து வறுமைக்கோடு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பயன்:
இந்த பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் இலவச சமையல் சிலிண்டர் பெறுவதற்கு ஆதார் எண்ணுடன், மொபைல் எண் கட்டாயமாக பதிவு செய்திருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் முதல் முறையாக சிலிண்டர் இணைப்பை பெறும்போது, அவற்றிற்கான பணத்தொகை விண்ணப்பதாரரின் வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்படும்.
அந்த பணத்தை பயன்படுத்தி மத்திய அரசின் இலவச சிலிண்டர் இணைப்பை பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் பயனடையும் விண்ணப்பதாரர்களுக்கு மாதத்திற்கு ஒரு இலவச சிலிண்டர் மட்டுமே பெற முடியும்.

No comments:
Post a Comment