புதிதாக
சொத்து வாங்குவோர் அது தொடர்பான வில்லங்க சான்றுகளை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். இதில்
முதல் கட்ட ஆய்வில், பதிவுத்துறையில் கட்டணம் செலுத்தி வில்லங்க சான்று வாங்க தேவையில்லை.
'ஆன்லைன்' முறையில் இலவசமாக வில்லங்க சான்றில், சொத்து பரிமாற்ற விபரங்கள் சரியாக இருக்கலாம். இதில்
அந்த சொத்து தொடர்பான முந்தய பரிமாற்றங்களில் சிக்கல் இல்லை என்றதும் மற்ற நடவடிக்கைகளை தொடரலாம்.
குறிப்பாக, ஆன்லைன் வில்லங்க சான்றில், சொத்து பரிமாற்ற விபரங்கள் சரியாக இருக்கலாம். ஆனால், அதில் விற்பவர் பெயர், வாங்குபவர் பெயர் ஆகியவை பத்திரத்தில் உள்ள படியே இருக்க வேண்டும்.
இதில் சில சமயங்களில் வேறுபாடு ஏற்படுவது பழைய முறையில் வாடிக்கையாக இருந்தது. உதாரணமாக,
கோவிந்தன், கண்ணன் ஆகியோர் பெயரில் கூட்டாக உள்ள சொத்து வங்கியில் அடமானம் வைக்கப்படுகிறது.
இந்த விபரம் வில்லங்க சான்றில் தெளிவாக உள்ளது. அதே
வேளையில் கடன் அடைக்கப்பட்ட நிலையில், ஆவண வைப்பு அடமானம் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அடமான ஆவணம் ரத்து செய்வதற்கான நடைமுறைகள் சரியாக மேற்கொள்ளப்படுகிறது. இதில்
ஆவண ரத்து விபரம் வில்லங்க சான்றில் இடம் பெற வேண்டும்.
பதிவுத்துறையின் பதிவேட்டில் சரியாக இடம் பெரும் இந்த விபரம் வில்லங்க சான்றில் அப்படியே வர வேண்டும்.
சில சமயங்களில், இரண்டு உரிமையாளர்களில் ஒருவர் பெயர் மற்றும் வில்லங்க சான்றில் வருவது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்துகிறது. கூட்டு
சொத்துக்களில் இரண்டு உரிமையாளர்களும், ஒரே குடும்பத்தினராக இருந்தால் பிரச்னை இல்லை. ஆனால்,
இருவரும் வெளியாட்களாக, ஒருவருக்கு ஒருவர் புரிதல் இல்லாதவராக இருந்தால் வில்லங்க சான்று பிழைகள் பெரிய பிளவை ஏற்படுத்திவிடும்.
ஆவணங்கள் சரியாக இருப்பதால் இந்த பிழைகள் பெரிதாக எடுத்துக்கொள்ளப்படுவது இல்லை. ஆனால்,
வங்கிக்கடன் போன்ற விஷயங்களுக்கு செல்லும் போது இது பெரிய பிரச்னையாக மாறுகிறது. பொது
மக்கள் கட்டணம் செலுத்தி பெறும் வில்லங்க சான்றில் பிழைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது பதிவுத்துறையின் பொறுப்பாகும். இதில்
பணியாளர்களின் அலட்சியத்தால் மக்கள் மீண்டும் மீண்டும் கட்டணம் செலுத்தி புதிய சான்று பெறும் நிலை ஏற்படுகிறது.
பதிவுத்துறை அதிகாரிகள் இதில் உரிய கவனம் செலுத்தி பிழைகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை.

No comments:
Post a Comment