அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாங்குவோர் பல்வேறு விஷயங்களில் ஏமாற்றப்படுவது தொடர்கிறது. இதில் எந்த அளவுக்கு விழிப்பாக இருக்க வேண்டும் என்பதில் குழப்பங்கள் நிலவுகின்றன. அடுக்குமாடி திட்டங்களில் விற்பனைக்கு வரும் வீட்டின் சீது ஆவண ரீதியாக வில்லங்கம் எதுவும் உள்ளதா என்று பார்ப்பது. வழக்கம். ஆனால், இதில் தற்போதுள்ள கட்டுமான நிறுவனத்துக்கு முன் நடந்த விற்பனை விபரங்களையே ஆய்வு செய்கிறோம்.
அந்த திட்டத்தில் நமக்கு முன் எத்தனை பேருக்கு வீடு விற்கப்பட்டுள்ளது. அதற்கான பத்திரப்பதிவுகள் முறையாக நடந்துள்ளதா என்பதை பார்க்க வேண் டும். இதில் ஒவ்வொரு வீட்டுக்கான நிலத்தின் பிரி படாத பங்கு விற்பனை பத்திரம் பதிவாகி இருக்கும். இந்த பத்திரங்கள் எப்படி பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை வில்லங்க சான்று வாயிலாக அறியலாம்.
புதிய அடுக்குமாடி குடி யிருப்பில் உங்களுக்கான யு.டி.எஸ்., பத்திரத்தை பதிவு செய்யும் முன் ஏற்க னவே நடந்த பதிவுகளை சரி பார்ப்பது அவசியம். இதில் எத்தனை பேருக்கு யு.டி.எஸ்., வழங்கப்பட் டுள்ளது என்பது தெரிய வரும். குறிப்பாக, இந்த பத்திரங்கள் யார் பெயரில் இருந்து யார் பெயருக்கு பதிவாகி உள்ளது என்பதை கவனமாக பாருங்கள்.
கட்டுமான நிறுவனம் விற்பனைக்கான அதிகாரம் பெற்று இருந்தால் அவர்கள் பெயரில் இருந்து தான் பத்திரம் கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும்.
சில இடங்களில் உரிமையாளர் பெயரில் இருந்தும் பத்திரங்கள் கொடுக்கப்படுவது உண்டு.
இத்தகைய சூழலில் உங்களுக்கு முன் எட்டு பத்திரங்கள் பதிவாகி உள்ளது
என்றால் அதில் சில பத்தி ரங்கள் உரிமையாளர் பெயரி லும், சில பத்திரங்கள் கட்டு மான நிறுவனம் பெயரிலும் கொடுக்கப்பட்டு இருக்கலாம். இது போன்ற நிகழ்வுகளில் கட்டுமான நிறுவனத் திடம் விசாரிக்கலாம்.
இதில் பிரச்னை இருப் பது போன்று தெரியவந் தால்
தொடர்ந்து அத் திட்டத்தில் ஈடுபடுவதை மறுபரிசீலனை செய்யலாம். குறிப்பாக, பத்திர நிலையிலேயே குழப்பம் இருந்தால் அத்திட்டத்தில் விதிமீறல் தொடர்பான பிரச்னைகள் இருக்க வாய்ப்புள்ளது. விதிகளை மீறி கட்டிய பாகங் களை கட்டுமான நிறுவனம் தானாக விற்பதற்கு பத்திரம் பதிவு செய்து இருக்கலாம். இத்தகைய பத்திரங்கள் பிற்காலத்தில் பிரச்னையை ஏற்படுத்தலாம் என்கின்றனர் நகரமைப்பு வல்லுனர்கள்.

No comments:
Post a Comment