ரஷ்ய அரசின் முடிவு காரணமாக 2025ம் ஆண்டில் இந்தியர்கள் விசா இல்லாமலேயே அந்த நாட்டுக்கு பயணிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
கல்வி, தொழில்,
சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் ரஷ்யா செல்கின்றனர்.
தங்கள் நாட்டுக்கு அதிக எண்ணிக்கையிலான இந்தியர்களுக்கு சுற்றுலா வருவதை ஊக்குவிக்கும் வகையில், அந்நாட்டு அரசு புதிய முடிவை எடுத்துள்ளது.
இது குறித்து மாஸ்கோ நகர சுற்றுலா நிர்வாக குழு தலைவர் எவ்ஜெனி கோஸ்லோவ் கூறியதாவது:
இரு நாடுகளுக்கு இடையே நிலவும் நீண்ட கால நல்லுறவு காரணமாக, இந்தியாவை மிக முக்கிய சுற்றுலா சந்தையாக ரஷ்யா கருதுகிறது.
விசா இல்லாமல் ரஷ்யா வர அனுமதிக்கும் நடைமுறை அமலுக்கு வந்தால் இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும்.

No comments:
Post a Comment